எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பட்டாசு ெவடித்து திமுகவினர் கொண்டாட்டம்

ஆட்டையாம்பட்டி, மே 25: சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்றதையொட்டி, ஆட்டையாம்பட்டி திமுக நகர செயலாளர் முருகப்பிரகாஷ் தலைமையில், திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், வாக்காளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஊர்வலமாக சென்றனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இடைப்பாடி: இடைப்பாடி நகர திமுக செயலாளர் பாஷா தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் திமுகவினர் கொண்டாடினர். இதில் நகர அவைத்தலைவர் மாதையன், மாவட்ட பிரதிநிதி தங்கவேல், சாமியப்பன், ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

ஓமலூர்: திமுக ேவட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஓமலூர் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில், மாவட்ட துணை செயலாளர் திருநாவுக்கரசு, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், ஓமலூர் நகர பொறுப்பாளர் ரவிசந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல், சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதியில் திமுக வர்த்தக அணி அமைப்பாளர் பழனிசாமி தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அழகாபுரத்தில் மாநகர முன்னாள் துணை செயலாளர் முரளி தலைமையில், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் பகுதி செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் சாலையில் பட்டாசுகள் வெடித்தும், அப்பகுதியில் சென்றவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இதில் மாநகர துணை செயலாளர் லலிதா சுந்தராஜன், மாவட்ட பிரதிநிதி கண்ணன், அஸ்தம்பட்டி வார்டு செயலாளர் சுந்தராஜன், மாநகர பிரதிநிதி ரமேஷ், இளைஞரணி அமைப்பாளர் மதன், துணை அமைப்பாளர் கோவிந்தராஜ், , மாவட்ட மகளிர் தொண்டரணி சங்கீதா நீதிவர்மன், பச்சியப்பன் கலந்து கொண்டனர்.

Related Stories: