ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏற்காடு, ஏப்.25: ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள், உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு நேற்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் முக்கிய சுற்றுலா தலங்களான சேர்வராயன் மலை, ஏற்காடு ஏரி, லேடீஸ் சீட், கரடி குகை, அண்ணா பூங்கா மற்றும் தாவரவியல் பூங்கா, பக்கோடா பாயிண்ட் ஆகிய இடங்களை கண்டு ரசித்தனர். மேலும் படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், இயற்கை காட்சிகளை ரசித்தவாறு உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். தேர்தல் முடிந்த நிலையில், நேற்று குவிந்த சுற்றுலா பயணிகளால் வியாபாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் மகிழ்ச்சியடைந்தனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Related Stories: