×

கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்பி செல்லகுமார் தலைவர்கள் சிலைக்கு மாலை

கிருஷ்ணகிரி, மே 25:  கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்பி டாக்டர் செல்லகுமார், தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்லகுமார், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியை விட 1,56,765 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

இதையடுத்து, நேற்று கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள காந்தி சிலைக்கும், ராசு வீதியில் உள்ள காமராஜர் சிலைக்கும், தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும், புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை உள்ளிட்ட தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ, முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்பிரமணி, நகர காங்கிரஸ் தலைவர் வின்சென்ட், முன்னாள் எம்பி வெற்றிச்செல்வன், திமுக விவசாய அணி மாநில துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், நகர திமுக செயலாளர் நவாப், மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, நிர்வாகிகள் கோவிந்தசாமி, சுப்பிரமணி, ஆறுமுகம், அஸ்லம், அரியப்பன், சாந்தி அரியப்பன், திருமலைசெல்வன், சரவணகுமார், ஆனந்தன், சவுந்தர்ராஜன், அமீன், விவேகானந்தன், மாதவன், வேலு, மாணிக்கம், கனல்சுப்பிரமணி, ராஜசேகர், கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Krishnagiri Congress ,leaders ,
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...