கெலமங்கலம் பட்டாளம்மன் கோயில் திருவிழா

தேன்கனிக்கோட்டை, மே 22: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் பட்டாளம்மன் கோயில் திருவிழாவில் பெண்கள் மாவிளக்கு, பூகரகம், அக்னிசெட்டி ஏந்தி ஊர்வலமாக சென்று அம்மனை வழிபட்டனர். பட்டாளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரூம், தளி எம்.எல்.ஏவுமான பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் ஆடு, கோழிகள் பலியிட்டு பக்தர்கள் வழிபட்டனர். விழாவில். கெலமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பெதுமக்கள் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.  

Related Stories: