ஓட்டலில் தீவிபத்து

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகரில் உள்ள ஓட்டலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சென்னை அண்ணாநகர் காவல் நிலையம் எதிரில் ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. நேற்று, இந்த ஓட்டல் ஊழியர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். வாடிக்கையாளர்கள் பலர் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது, ஓட்டல் வாசலில் இருந்த வயர் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

Advertising
Advertising

அதைப் பார்த்து அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள், மற்றும் ஓட்டல் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக மின் இணைப்பை துண்டித்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தனர். விரைந்து தீயை அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Related Stories: