இடைத்தேர்தல் பிரசாரம் நாளை நிறைவு அரவக்குறிச்சி தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம்

கரூர், மே16: அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்கான இறுதி கட்டப் பிரசாரம் நாளையுடன் முடிவடைவதால் தொகுதி முழுவதும் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அரவக்குறிச்சிசட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 63 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்புமனு தாக்கலுக்கு பிறகு முக்கிய கட்சி வேட்பாளர்களான திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி,அதிமுகவேட்பாளர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் கடந்த 10 தினங்களாக தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக, தலைவர்களும், இரண்டாம் கட்ட தலைவர்களும், நடிகர்களும் அவ்வப்போது வந்து பிரசாரம் மேற்கொண்டு சென்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒபிஎஸ் ஆகியோர் இரண்டு முறையும், திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே, 7 மற்றும் 8ம்தேதியும் பிரசாரம் செய்து சென்றுள்ளார். தொடர்ந்து, நேற்று உதயநிதி ஸ்டாலின் அரவக்குறிச்சி தொகுதி முழுதும் செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, இறுதி கட்ட பிரச்சாரம் நடைபெறும் நாளான, மே 17ம்தேதி (நாளை) திமுக தலைவர் ஸ்டாலின்   தொகுதி முழுவதும் இறுதிக் கட்ட பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இதன் காரணமாக, அரவக்குறிச்சி தொகுதி முழுவதும் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: