பெட்ட முகிலாளம் மலை கிராமங்களில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு முகாம்

தேன்கனிக்கோட்டை, மே 15: பெட்முகிலாளம் மலை கிராமத்தில், பள்ளி இடைநின்ற மாணவர்களை  பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கபட்டது. கெலமங்கலம் ஒன்றியம் பெட்டமுகிலாளம் ஊராட்சிக்குட்பட்ட கோட்டையூர்கொல்லை, சித்திக்நகர், சித்தாபுரம், தட்டகரை ஆகிய மலை கிராமங்களில், பள்ளி இடைநின்ற மாணவர்கள் ஆய்வு மற்றும் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். முகாமில் கல்வியின் நோக்கம், கல்வியால் சமுதாய முன்னேற்றம், மலைவாழ்மக்களுக்கு மத்திய, மாநில அரசு வழங்கும் கல்வி சலுகைகள் குறித்தும் பேசி பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் மலை கிராமங்களில் 50க்கும் மேற்பட்ட பள்ளி இடைநின்ற மாணவர்களை உண்டு உறைவிடப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கேட்டுக்கொண்டார். முகாமில் மாவட்ட கூடுதல் திட்ட அலுவலர் நாராயணா, தேன்கனிக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர்  நரசிம்மா, தளி வட்டார கல்வி அலுவலர்கள் நாகராஜ், வெங்கட்குமார், அண்ணைய்யா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சர்தார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் கீதா, தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் வெங்கடாசலம், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசியர்கள், கேஜிபிவி, ஏஆர்எஸ் உண்டு உறைவிடப்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: