விவசாய விளைபொருட்கள் பாதுகாக்க குளிர்சாதனகிடங்கு அமைக்க நடவடிக்கை அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் உறுதி

க.பரமத்தி, மே15: விவசாய விளை பொருட்களை பாதுகாக்கும் வகையில் குளிர் சாதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன்  உறுதியளித்தார். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட குக்கிராமங்கள் தோறும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்.  நேற்று க.பரமத்தி ஒன்றியம் எலவனூர், தொக்குப்பட்டி ஆகிய இரு வெவ்வேறு ஊராட்சிகளுக்குட்பட்ட குக்கிராமங்கள் முழுவதும் சென்று வேட்பாளர் செந்தில்நாதன் வாக்கு சேகரித்தார். சென்ற இடங்களில் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவருடன் ஒன்றிய செயலாளர் பொன்சரவணன், மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் பேசுகையில், ஏழை எளிய மக்களில் வீடு இல்லாதோருக்கு மூன்று சென்ட் நிலத்துடன் கான்கிரிட் வீடுகள் கட்டிதரப்படும்.பள்ளபட்டி பகுதியில் அம்மா உணவகமும் தொகுதிக்குள் பல்வேறு இடங்களில் சமுதாய கூடமும், அரசு கலைஅறிவியல் கல்லூரியும், விவசாய விளை பொருட்களை பாதுகாக்கும் வகையில் குளிர் சாதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முருங்கைகாய் பவுடர் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் பொது மக்களுக்காக நல்ல பல அரிய திட்டங்கள் கொண்டு வருவார். எனவே இரட்டை இலை சின்னத்தில் வாக்களி–்த்து  வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.

பிரசாரத்தில் மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கிளை  நிர்வாகிகள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: