அமமுக பிரசாரத்திற்கு எங்கள் கொடியா?

தூத்துக்குடியில்  புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர்  கிருஷ்ணசாமி அளித்த பேட்டியில்: மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் புதிய தமிழகத்தின் ஆதரவோடு அதிமுக கூட்டணி மகத்தான வெற்றிபெறும். தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் புதிய தமிழகம் கட்சி அதிமுகவுக்கு முழு ஆதரவு அளித்துள்ளது. மேலும் கடந்த 1ம் தேதி முதல் அதிமுக வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக தொகுதி முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். கிட்டத்தட்ட 100 கிராமங்களில் வாக்கு சேகரித்துள்ளேன்.

அத்துடன் தொகுதியில் புதிய தமிழகம் கட்சிக்கு உள்ள மிகவும் கணிசமான வாக்குகளை கொண்டு அமோக வெற்றிபெறச் செய்வோம். அதிமுகவுடன் இணக்கமாகத்தான் நாங்கள் செயல்படுகிறோம். அதிமுகவுக்கும், புதிய தமிழகம் கட்சிக்கும் இம்மியளவு கூட கருத்து  வேறுபாடு இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதும் அவர் தலைமையிலான அதிமுக ஆட்சி மீதும் மக்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.

தென்காசி மக்களவைத் தொகுதியில் நான் வெற்றிபெற்றால் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை தர வலியுறுத்துவேன். ஓட்டப்பிடாரத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை பூங்கா திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். புதிய தமிழகம் கட்சியின் கொடியை காசிலிங்கபுரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். இது தவறாகும். இதைத் தடுத்துநிறுத்த முயன்ற கட்சி நிர்வாகி குபேந்திரன் உள்ளிட்டவர்களையும் தாக்கியுள்ளனர். எங்களது கட்சி கொடியை பயன்படுத்துவது சட்ட விரோதம் மட்டுமல்ல, தேர்தல் விதிமுறை மீறலாகும். இது குறித்து 15 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம்

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் தெரிவித்தார்.

கோவில்பட்டியில் முத்தரசன் அளித்த பேட்டி: வரும் 19ம் தேதி ஓட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 18 தொகுதி இடைத்தேர்தலில் தங்களுக்கு பாதகமான முடிவு இருக்கும் என்பதால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக 3 அதிமுக எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய பேரவை தலைவர் மேற்கொண்ட முயற்சிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை வரவேற்கிறோம்.

 தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி ஆட்சியின்மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர். இதனால் தார்மீக பொறுப்பேற்று தாங்களாவே பதவி விலக வேண்டும். ஆனால் ஏதாவது ஒரு வகையில் பதவிகளை தக்க வைத்து கொள்வதற்கு ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீர்நிலைகளைப் மாநில அரசு பாதுகாக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனால் சேலம் அருகே சேலத்தான்பட்டியில் 300 ஏக்கர் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டியுள்ளார். தீர்ப்பிற்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்படுவது சரியா?

 தமிழகத்தில் 80 லட்சம் பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள ரயில்வே போன்ற மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வடமாநில இளைஞர்கள் 95 சதவீதம் பேர் நியமிக்கப்படுகின்றனர். இதனால் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது.

 இதுபோன்ற நடவடிக்கைகளால் தமிழக மக்களின் எதிர்ப்பானது அதிக அளவில் தேர்தலில் பிரதிபலித்துள்ளது. பாஜ, அதிமுக அலைக்கு எதிரான தீர்ப்பாக மக்களவை மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்கள் அமையும். இதனால் மத்தியிலும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றும் ஏற்படுவது உறுதி.

சமீபத்தில் வீசிய சூறைக்காற்றால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சரிந்து  நாசமாகியுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட சாகுபடியாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர்கள் அழகுமுத்துப்பாண்டியன், காசிவிஸ்வநாதன், இசக்கி கோவில்பட்டி நகர செயலாளர் சரோஜா, மாவட்டக்குழு உறுப்பினர் பரமராஜ், முனியசாமி, அலாவுதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போதைய பிரசாரங்களில் ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் நாங்கள்.  இதனால் நாங்கள்தான் தொகுதி பிரச்னைகளை தீர்க்க முடியும் என்று பேசி  வருகிறார். இவ்வாறு தேர்தல் பிரசாரத்தில் பேசிவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு கேள்விகளை கேட்கிறேன். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் சுட்டுக்  கொல்லப்பட்டனர். பலர்

Related Stories: