வாசுதேவநல்லூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

நெல்லை, மே 7:  வாசுதேவநல்லூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

வாசுதேவநல்லூர் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாம், சங்கனாப்பேரியில் நடந்து வருகிறது. துவக்க விழாவிற்கு கல்லூரி தாளாளர் தங்கப்பழம் தலைமை வகித்தார். செயலாளர் முருகேசன், முதல்வர் சீனிவாசன், இயக்குநர் ராஜகோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமின் ஒரு பகுதியாக மது ஒழிப்பு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வாசுதேவநல்லூர் காமராஜர் சிலையில் தொடங்கி மார்க்கெட் தெரு, ரத வீதி, முக்கிய தெருக்கள் மற்றும் பழைய பேருந்து நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையத்தில் பேரணி முடிவடைந்தது. இதில் மாணவர்கள் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும் மற்றும் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியபடி சென்றனர். பேரணியில் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஷகிலா, சவுமியா மற்றும் பார்த்திபன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பேரணியையொட்டி போக்குவரத்தை வாசுதேவநல்லூர் போலீசார் ஒழுங்குபடுத்தினர்.

Related Stories: