போக்சோ சட்டத்தில் ெகாத்தனார் கைது

மார்த்தாண்டம், மே 1: மாத்தூர்  தொட்டி பாலத்தில் சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற சிறுமியிடம்  சில்மிஷத்தில் ஈடுபட்ட கொத்தனாரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

பூதப்பாண்டி  அருகே ஈசாந்திமங்கலம் நாவல்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெரின் (23).  கொத்தனார். தனக்கு தெரிந்த சிலரை அழைத்துக்கொண்டு குமரி மாவட்டத்தின்  பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கும் சென்றுள்ளார். அவர்களுடன் 4ம் வகுப்பு  மாணவி ஒருவர், தனது தாய் மற்றும் உறவினர்களுடன் சென்றுள்ளார். பல்வேறு  இடங்களுக்கு சென்ற அவர்கள் மாத்தூர் தொட்டி பாலத்துக்கு சென்றுள்ளனர்.

அங்கு  அனைவரும் இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஜெரின் 4ம் வகுப்பு மாணவியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டதாக  தெரிகிறது. இதை அந்த வழியாக சென்ற சிலர் கவனித்துள்ளனர். அவர்கள் ஜெரினை பிடித்து திருவட்டார்  போலீசில் ஒப்படைத்தனர்.

இது பெண்கள் விவகாரம் என்பதால் அவர்கள்  ஜெரினை மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் பார்வதி விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து போக்சோ  சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜெரினை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: