இஸ்ரோ போட்டிக்கு தேர்வான திருச்சி மாணவர் கலெக்டர் பாராட்டு

திருச்சி, ஏப்.25: திருச்சி மாவட்டம், முசிறி அருகே நாச்சம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் நித்தியராஜ் என்ற மாணவன் இஸ்ரோவால் நடத்தப்படும் ‘2019 இளம் விஞ்ஞானிகளுக்கான’ பயிற்சியில் கலந்துகொள்ள மாநிலத்தில் ஒருவராக தேர்வாகியுள்ளார்.

பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியன், அறிவியல் ஆசிரியர் காளிதாஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, இ.ரெ.மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் மாவட்ட அளவில் முதலிடமும், மதுரை சி.பி.எம். பள்ளியில் மாநில அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் முதலிடமும், பெங்களுரில் தென்னிந்திய அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடமும் மற்றும் அப்துல்கலாம் நினைவு மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் இரண்டாம் இடமும் பெற்றதைத் தொடர்ந்து, இஸ்ரோவால் நடத்தப்படும் யுவிகா-2019 இளம் விஞ்ஞானிகளுக்கான பயிற்சியில் கலந்துகொள்ள மாநிலத்தில் மூவரில் ஒருவராக தேர்வாகியுள்ளார். இப்பயிற்சியானது மே மாதம் 12ம் தேதி முதல் இரண்டு வாரங்கள் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெறவுள்ளது. மாணவன் நித்தியராஜை கலெக்டர் சிவராசு பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories: