×

பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணி

ஓசூர்,ஏப்.24:  ஓசூரில் இருந்து மத்தம் செல்லும் சாலையை சீரமைக்க, ஜல்லிக்கற்கள் கொட்டியவர்கள் பணியை பாதியில் நிறுத்தியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் இருந்து மத்தம் செல்லும் சாலை பழுதடைந்து கரடு முரடாக இருந்தது. இதையடுத்து மத்தம் சாலையை புதுப்பிக்க, கடந்த சில மாதங்களுக்கு முன் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. ஆனால் தார்போடும் பணியை மேற்கொள்ளாமல் பாதியில் நிறுத்த விட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து செம்மொழி நகர் குடியிருப்போர் சங்க தலைவர் பாபு கூறியதாவது: இந்த பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த டிசம்பர் மாதம் மத்தம் சாலையை புதுப்பிக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. அதன்பின் பணியை பாதியில் நிறுத்தி விட்டனர். இந்த சாலை வழியாக தனியார் தொழிற்சாலைகளுக்கும், சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருசக்கர வாகனத்தில் செல்கின்றனர். மேலும் மத்தம், கொத்தூர், அரசனட்டி உள்ளிட்ட பல பகுதிகக்கும் செல்லும் பிரதான சாலையாக உள்ளது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணிகளை மீண்டும் தொடங்கி முழுமை படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு