ஆனைக்குட்டம் அணை வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் விருதுநகர், திருத்தங்கல்லுக்கு சோதனை கோடை மழை கை கொடுக்குமா?

விருதுநகர், ஏப். 24: விருதுநகர், திருத்தங்கல் நகராட்சிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆனைக்குட்டம் அணை வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. கோடைமழை கை கொடுத்தால் மட்டும் நிலமையை சமாளிக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்

கின்றனர். விருதுநகர்-சிவகாசி இடையே அர்ஜூனா நதியில் ஆனைக்குட்டம் அணை கட்டப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, வத்திராயிருப்பு, எம்.புதுப்பட்டி பகுதிகளில் பெய்யும் மழை நீர் இந்த அணையில் தேங்கும். அணைக்கு வெளிபுறம் உள்ள கிணறுகள், தடுப்பணையில் இருந்து விருதுநகர் நகராட்சிக்கு தினசரி 20 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைத்து வருகிறது.

திருத்தங்கல் நகராட்சிக்கு வெளிப்பகுதி கிணற்றில் இருந்து குடிநீர் கிடைத்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு பருவமழை முழுமையாக பெய்யதாதல், அணை முழு கொள்ளவை எட்டவில்லை. இதனால், அணை வறண்டு விட்டது. இதனால் விருதுநகர், திருத்தங்கல் நகராட்சிகளுக்கு கிடைக்கும் நீரின் அளவும் குறைந்து வருகிறது. நகராட்சிகள் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. 7.5 மீ ஆழம் உடைய அணையில் 2 மீ ஆழத்திற்கு மண் பரவி மேடாகி கிடக்கிறது. அணை வற்றி வறண்டு கிடக்கும் நிலையில், அணையின் உள்பகுதியில் முழுமையாக வண்டல் மண்ணை சமமான அளவில் அகற்றி, அணையின் கொள்ளவை அதிகரிக்க வேண்டும். கோடைமழை பெய்தால் மட்டுமே விருதுநகர், திருத்தங்கல் நகராட்சிகளின் குடிநீர் ஆதாரத்திற்கு வழி கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: