பணக்கார இளைஞர்களை குறிவைத்து ‘போதை ஸ்டாம்ப்’ விற்றவர் கைது: ரூ.3.75 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்

சென்னை: சென்னை அண்ணாநகர் பகுதியில் பணக்கார இளைஞர்களை குறிவைத்து போதை ஸ்டாம்ப் மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்த நபரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.3.75 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் ெசய்யப்பட்டது. சென்னை அண்ணாநகர் கிழக்கு முகப்பேரில் உள்ள நீச்சல் குளம் அருகே போதைப்பொருள் விற்பனை நடப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு ேபாலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு மப்டியில் சென்ற போலீசார் பல மணி நேரம் ரகசியமாக நீச்சல் குளம் பகுதியை கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு ஒரு வாலிபர், அப்பகுதியில் தன் மொபட்டை நிறுத்தினார். சிறிது நேரத்தில், அருகில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் சாரைசாரையாக வந்து அவரிடம் பணத்தை கொடுத்து ரகசியமாக பொருட்களை வாங்கிச் சென்றனர். இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், மொபட்டில் வந்த நபரை பிடித்து சோதனையிட்டனர்.

அவரிடம் பல்வேறு வடிவங்களில் சந்தேகத்துக்குரிய மாத்திரைகள் இருந்தன. இதுகுறித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தபோது, அவை அனைத்தும் போதைப்பொருள் என்றும், அதில் ஸ்டாம்பு வடிவில் உள்ள மருந்து நாக்கில் பட்டால் போதை வரும் என்றும் தெரிவித்தார். மேலும், அவனிரிடம் இருந்து 5 எல்எஸ்டி ஸ்டாம்ப், 12.360 கிராம் கொண்ட 23 எம்டிஎம்ஏ போதை மாத்திரைகள், 4.830 கிராம் ஹாஸ் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட நபர் திருவல்லிக்கேணி குப்பு முத்து தெருவை சேர்ந்த சரத் (எ) சரவணன் (23) என்பதும், பணக்கார இளைஞர்களை குறிவைத்து, போதை பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரிந்தது. அவரை கைது செய்தனர். பிடிப்பட்ட போதை ஸ்டாம்ப் மற்றும் மாத்திரைகளின் மதிப்பு ரூ.3.75 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: