கடமலை- மயிலையில் திமுக வேட்பாளர் தீவிர வாக்குசேகரிப்பு

வருசநாடு, ஏப்.16: கடமலை - மயிலை ஒன்றியத்தில் ஆண்டிபட்டி திமுக வேட்பாளர் மகாராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து குலவையிட்டு வரவேற்பு அளித்தனர். வருசநாடு, வைகைநகர்,தர்மராஜபுரம்,பவளநகர், அம்பேத்கார்காலனி, முருக்கோடை, வாலிப்பாறை, தும்மக்குண்டு சீலமுத்தையாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வீதி, வீதியாகச் சென்று மகாராஜன் வாக்குசேகரித்தார்.

கடமலை - மயிலை திமுக ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி, மாநில தீர்மானக்குழு இணைச்செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் எம்எல்ஏ ஆசையன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சேரன், வழக்கறிஞர் பிரிவு அணி செயலாளர்அண்ணாநிதி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் பிரபாகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

Related Stories: