கருமந்துறை, கரியகோயிலில் நாட்டுத்துப்பாக்கியை ஒப்படைக்க உத்தரவு

சேலம், ஏப்.8: சேலம் கருமந்துறை, கரியகோயில் மலை பகுதியில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தால் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என போலீசார் உத்தரவிட்டுள்ளனர். வாழப்படி உட்கோட்டத்திற்கு உட்பட்ட கருமந்துறை, கரியகோயில் மலை கிராம பகுதிகளில் உரிமம் இன்றி நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றம். அதனால், நாட்டுத்துப்பாக்கியை யாராவது வைத்திருந்தால், அந்தந்த மலை கிராமத்தில் விஏஓ அல்லது போலீசாரிடம் நேரடியாக ஒப்படைக்க வாழப்பாடி டிஎஸ்பி சூரியமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். போலீசாரால் நடத்தப்படும் சோதனையில் நாட்டுத்துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டால், சட்டப்படி வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் பற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விவரத்தை ரகசியமாக வைத்திருப்போம். ஆகவே டிஎஸ்பி அலுவலக எண் 94981-00975, கருமந்துறை ஸ்டேஷனுக்கு 04292-244625, கரியகோயில் ஸ்டேஷனுக்கு 94981-01011 ஆகியவற்றிற்கு தகவல்களை தெரிவிக்கலாம் என டிஎஸ்பி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: