மோடி ஆட்சி காலத்தில் பொதுமக்கள் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம்: தயாநிதி மாறன் பிரசாரம்

சென்னை: மோடி ஆட்சி காலத்தில் மக்கள் சந்திக்கும் இன்னல்கள் என்னென்ன என்பதை விளக்கி, மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி  மாறன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் நேற்று நுங்கம்பாக்கம் மற்றும் தி.நகர் பகுதிகளில் உள்ள அசலாத்தம்மன் கோயில் கிழக்கு  மாட வீதி, மேல்பாடி முத்து தெரு, ராமா தெரு, குமரப்பா தெரு, திருமூர்த்தி தெரு, கோடம்பாக்கம் மெயின் ரோடு, தங்கவேல் தெரு, பாலமுத்து கிருஷ்ணா தெரு,  தர்மாபுரம் மெயின் ரோடு, சோலையப்பன் தெரு, கோடம்பாக்கம் ஹைரோடு, மாம்பலம் ஹைரோடு, ராமகிருஷ்ணா தெரு, வடக்கு உஸ்மான் சாலை, சாரங்கபாணி குடிசை  பகுதி, அபிபுல்லா சாலை, கிரி சாலை, பிரகாசம் சாலை, ஜி.என்.செட்டி கிராஸ் தெரு, பின்னி சாலை, கஸ்தூரி ரங்கன் ரோடு, வரதராஜபுரம், மெயின் ரோடு, எம்.எம். கார்டன்  குடிசை பகுதி, போயஸ் சாலை, போயஸ் சாலை 3வது தெரு, ராஜகிருஷ்ணா ராவ் சாலை, வெங்கட்ரத்தினா தெரு, விஜயராகவா சாலை, திரு.வி.க. குடியிருப்பு, டாக்டர்  தாமஸ் சாலை, தெற்கு போக் சாலை, டாக்டர் தாமஸ் சாலை குடிசை பகுதி  உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து உதயசூரியன்  சின்னத்திற்கு   வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: 5 ஆண்டு காலத்தில் மோடி அரசால் நாம் பட்ட இன்னல்கள் ஏராளம். 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து நம்மை ஒரு மாத காலம் வங்கி வாசல்களில்  காக்க வைத்தார். ஆனால் சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடந்த போது 120 கோடிக்கு புதிய 2000 நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.ஜிஎஸ்டி எனும் கொடிய வரி மூலம் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏழை மக்களிடம் எவ்வளவு பிடுங்க முடியுமோ அவ்வளவு பிடுங்கி விட்டார்கள். காஸ்  சிலிண்டர், பெட்ரோல் விலை உச்சத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது. விரைவில் பெட்ரோல் விலை செஞ்சுரி அடிக்க உள்ளது.  நீட் எனும் கொடிய தேர்வு மூலம் நம்  குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விட்டனர்.

இவ்வாறு அவர் பேசினார். கு.க.செல்வம் எம்எல்ஏ, பகுதி செயலாளர் அன்புதுரை   மற்றும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய   யூனியன்  முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்றனர்.பிரசாரத்தின்போது இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவி உள்ளிட்ட இளைஞர் மற்றும் பொதுமக்கள் தயாநிதி மாறனுடன்  செல்பி எடுத்துக் கொண்டனர். மேலும்,  அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர்களின் குழந்தைகளுக்கு “ஸ்டாலின், கருணாநிதி, தமிழ்செல்வி, அன்பழகன் என்று பெயர் சூட்டினார்.

Related Stories: