சேத்தியாத்தோப்பில் வீதி வீதியாக திருமாவளவன் பானை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பு

சேத்தியாத்தோப்பு, மார்ச் 27: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வீதி வீதியாக வாக்குகள் சேகரித்தார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இதனை தொடர்ந்து கூட்டணி கட்சிகளான திமுக, மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் சேத்தியாத்தோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் சென்று தனக்கு பானை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதுமட்டுமின்றி சேத்தியாத்தோப்பு அனைத்து வணிகர் சங்கத்தினர், வணிகர் சங்க மாவட்ட தலைவர் பக்கிரிசாமி, சேத்தியாத்தோப்பு திமுக நகர செயலாளர் பழனி மனோகரன், முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம், குலோத்துங்கன் உள்ளிட்ட பலரையும் அவர்களது இல்லங்களுக்கு சென்று சந்தித்து திமுக கூட்டணியில் போட்டியிடும் தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது திமுக புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் துரை கி.சரவணன், திமுக ஒன்றிய செயலாளர் மதியழகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெயராமன், மாவட்ட பிரதிநிதி கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Related Stories: