சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசனிடம் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் நேற்று காலை சந்தித்து வாழ்த்து பெற்றார்.தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டி யிடும் ஜெயவர்தன், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை அவர்களது வீடுகளுக்குச் சென்று சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அதன்படி, பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதை தொடர்ந்து, தமாகா தலைவர் ஜி.கே. வாசனை, நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், ஜெயவர்தன் நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது, அதிமுக மாவட்ட செயலாளர்கள் வி.என் ரவி, தி.நகர் சத்யா, பகுதி செயலாளர் டி.ஜெயசந்திரன் மற்றும் தமாகா நிர்வாகிகள் கோவை தங்கம், முனவர் பாட்சா, யுவராஜா, கொட்டிவாக்கம் முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.