தேசிய பேரிடர் குழு ஆய்வு

கிருஷ்ணகிரி, மார்ச் 22: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். கிருஷண்கிரி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். செகந்திராபாத்தைச் சேர்ந்த மேஜர் தீபக் மண்டல் தலைமையிலான ராணுவ சிறப்பு புலனாய்வுப் பிரிவை சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினர், இதில் கலந்து கொண்டனர். இந்த ஆய்வின்போது நடந்த ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர் பிரபாகர், மேலாண்மைக்குழு தாசில்தார் மதுசெழியன் உள்பட பலர் பங்கேற்றனர். பின்னர், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாநில கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை ஆய்வு செய்து, அவசர கால கருவிகளின் செயல்பாடுகளை சோதனை செய்தனர். தொடர்ந்து தீயணைப்புத்துறை, காவல்துறை, வனத்துறை, பொது சுகாதாரத்துறை, கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளில் இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், குறைபாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். மாவட்டம் முழுவதும் இந்த குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

Related Stories: