×

ஓசூரில் இன்று திமுக செயற்குழு கூட்டம்

தேன்கனிக்கோட்டை, மார்ச் 19: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி.பிரகாஷ் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் ஓசூரில் இன்று (19ம் தேதி) காலை 10 மணியளவில் நடைபெறுகின்றது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் யுவராஜ் தலைமை தாங்குகிறார். மாவட்ட துணை செயலாளர் முருகன் எம்எல்ஏ, மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர்.  இதில் ஓசூர் இடைதேர்தல், கிருஷ்ணகிரி மாவட்ட நாடாளுமன்ற தேர்தல், வரும் 30ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தருதல் போன்றவைகள் குறித்து பேசப்படுகின்றது. கூட்டத்தில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நகர, பேரூர் கழக செயலளார்கள் மற்றும் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு  கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : DMK ,meeting ,Hosur ,
× RELATED முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற திமுக எம்எல்ஏக்கள்