கள்ளக்காதலை தட்டிக்ேகட்ட மைத்துனருக்கு கத்திக்குத்து

சென்னை: கீழ்ப்பாக்கம் நேரு பார்க் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ் (28). இவரது சகோதரி விமலா (34).  விமலாவிற்கும், தாண்டவராயன் பிள்ளை சத்திரம் 12வது குறுக்கு தெருவை ேசர்ந்த கமல் (43) என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கமல், சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலகத்தில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கமலுக்கு அதே பகுதியை ேசர்ந்த வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்த சத்திராஜ் தனது நண்பன் நேதாஜியுடன் வந்து கமலை கண்டித்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த கமல், வீட்டில் இருந்த கத்தியால் சத்தியராஜை சரமாரியாக குத்தியுள்ளார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து கமலை கைது செய்தனர்.

Advertising
Advertising

* அம்பத்தூர், விநாயகபுரம், ஈ.வே.ரா தெருவை சேர்ந்த (39) என்பவர் கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

* சேத்துப்பட்டு எம்.எஸ்.நகரை சேர்ந்த முனுசாமி (40), சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி இறந்தார்.

*விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுகா, சேத்தூர் கிராமத்தை சேர்ந்த காளிராஜன் (24), தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள ஒரு தனியார் நிறுவன கட்டிடத்தின் 3வது மாடியில் தங்கி, ஒரு தனியார் டிராவல்சில் கார் டிரைவராக பணியாற்றினார். நேற்று முன்தினம் இரவு 3வது மாடியில் இருந்து தடுமாறி கீழே விழுந்து இறந்தார்.

* புளியந்தோப்பு பின்னி மில் வளாகத்தில் முன்விரோதம் காரணமாக ஒருவரை கொலை செய்ய கத்தியுடன் காத்திருந்த புளியந்தோப்பு குருசாமி நகரை சேர்ந்த சதீஷ் என்ற பில்லா சதீஷ் (24), கன்னிகாபுரத்தை சேர்ந்த கோழி தலை என்ற அஜித் குமார் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* வேளச்சேரி திரவுபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மூர்த்தி (24) என்பவரை முன்விரோதம் காரணமாக வேளச்சேரியை சேர்ந்த ஆறுமுகம் (28) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.

பைக்கை எரித்தவர் கைது

அயனாவரம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த சுரேஷ் (29) என்பவருக்கும், ஓட்டேரியை சேர்ந்த மீனா (25) என்பருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று சுரேஷின் வீட்டின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து சுரேஷ் அயனாவரம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், மீனா அண்ணாநகரில் உள்ள ஒரு காலணி விற்பனை செய்யும் நிலையத்தில் வேலை செய்தபோது ஓட்டேரி குளக்கரை சாலையை சேர்ந்த கவாஸ்கர் (38) என்பவர் மீனாவை ஒருதலையாக காலித்து வந்துள்ளார். மேலும் தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் இவரது காதலுக்கு மீனா செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் மீனா வேறொருவரை காதலித்து திருமணம் செய்தததை பொறுத்துக்கொள்ள முடியாத கவாஸ்கர் நேற்று சுரேஷின் இரு சக்கர வாகனத்தை எரித்தது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.

Related Stories: