சந்தேக நபர்களை பிடிக்க விரட்டியபோது பைக்கில் இருந்து தவறி விழுந்து எஸ்ஐ காயம்

சென்னை: சந்தேக நபர்களை பிடிக்க விரட்டியபோது, பைக்கில் இருந்து தவறி விழுந்து எஸ்ஐ படுகாயமடைந்தார். சென்னையில் நடைபெறும் குற்றங்களை தடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், போலீசார் தீவிர வாகன சோதனை, ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சிந்தாதிரிப்ேபட்டை உதவி ஆய்வாளர் பிரகாஷ் (34), நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு எல்டாம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.  பின்னர், நேற்று அதிகாலை 3 மணிக்கு அருணாசலம் நாயக்கன் சாலை வழியாக காவல் நிலையம் நோக்கி சென்றபோது, அவ்வழியாக பைக்கில் சென்ற 3 பேர், உதவி ஆய்வாளரை கேலி செய்தபடி ெசன்றனர்.

இதனால், ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர், தனது பைக்கில் அவர்களை பிடிக்க துரத்தி சென்றார். அருணாச்சலம் நாயக்கன் சாலையில் உள்ள வேகத்தடையில் வேகமாக பைக் ஏறி இறங்கியபோது உதவி ஆய்வாளர் பிரகாஷ், பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். இதை பார்த்ததும் அப்பகுதியினர் வந்து, உதவி ஆய்வாளரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்படி, அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று தப்பி சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: