சொத்து குவிப்பு வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு 2 ஆண்டு சிறை: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அரசு அதிகாரிகளான  கணவன், மனைவி இருவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர்கள் அறிவுடை நம்பி. இவரது மனைவி சத்தியவாணி. அறிவுடைநம்பி சென்னை டி.எம்.எஸ்சில் துணை மருத்து கட்டுப்பாட்டு அதிகாரியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி தலைமை செயலகத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், தம்பதி இருவரும் பணியில் இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் கடந்த 2007ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், வருமானத்துக்கு அதிகமாக 90 சதவீத சொத்து சேர்த்திருப்பது தெரியவந்தது.

Advertising
Advertising

இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள 9வது சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்து நேற்று நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு வழங்கினார். அதில், இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது. எனவே அறிவுடை நம்பிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ₹2 லட்சம் அபராதமும், சத்தியவாணிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ₹1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Related Stories: