கிரிவலத்துக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தாம்பரம்-நாகர்கோவில்-தாம்பரம் (22657-22658) ரயில, சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு  நாகர்கோவிலுக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06007) இன்று (19ம் தேதி) ரத்து செய்யப்படுகிறது. மேலும் நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு புறப்படும் ரயில் (06008) நாளை (20ம் தேதி) ரத்து செய்யப்படுகிறது.  இதேபோல் திருவண்ணாமலையில் நடக்கும் கிரிவலம் பண்டிகைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி நாளை (20ம் தேதி) வேலூரில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்படும் ரயில் திருவண்ணாமலைக்கு இரவு 11.25 மணிக்கு சென்றடையும். இதேபோல் 21ம் தேதி திருவண்ணாலையில் இருந்து காலை 4 மணிக்கு புறப்படும் ரயில் வேலூருக்கு காலை 5.55 மணிக்கு சென்றடைகிறது.

Advertising
Advertising

மேலும் தாம்பரம்-நாகர்கோவில் இடையே அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் 16 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், 2 லக்கேஜ் பெட்டிகளும் உள்ளது. தற்போது இதில் நிரந்தரமாக 2 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படுகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: