×

அரசு கட்டிடங்கள், பொது இடங்களில் சுவர் விளம்பரங்களை உடனே அகற்ற வேண்டும்

கிருஷ்ணகிரி, மார்ச் 15: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு கட்டிடங்கள், பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 10ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு கட்டிடங்கள், மேம்பாலங்கள், பொதுமக்களின் பார்வை படக்கூடிய தனியார் கட்டிடங்கள், பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களோ அல்லது சின்னங்களோ வரைவது, பேனர்கள், பதாகைகள், சுவரொட்டிகள் ஒட்டுவது போன்றவை உடனடியாக தடை செய்யப்படுகிறது. அவ்வாறு ஏற்கனவே வரையப்பட்டுள்ள அரசியல் கட்சி சார்ந்த விவரங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இதில் அகற்றாமல் இருக்கும் அரசியல் கட்சியினர் மற்றும் தனி நபர்கள் மீது தமிழ்நாடு பொது வெளிகள்(சீர்குலைத்தல் தடுப்பு) சட்டம் 1959ன்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார். 

Tags : Government buildings ,places ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...