உயர் கல்வித்துறை சார்பில் 78 கோடியில் புதிய கட்டிடம்: காணொலி மூலம் முதல்வர் திறந்தார்

சென்னை: உயர் கல்வித்துறை சார்பில் 77 கோடியே 94 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிங்களை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். உயர்கல்வித்துறை சார்பில் பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7 கோடியே 25 லட்சம் ரூபாயில் கட்டிடம், செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக்கல்லூரியில் ₹1 கோடியே 97 லட்சத்தில் 10 வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டிடம், சென்னை- வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் ₹70 லட்சத்தில் விடுதி கட்டிடம், சென்னை-அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி வளாகத்தில் ₹8 கோடியே 60 லட்சத்து 25 ஆயிரத்தில் மாணவர் விடுதி கட்டிடம் என மொத்தம் ₹77 கோடியே 94 லட்சத்து 85 ஆயிரத்தில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.

Advertising
Advertising

மேலும், தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் மென்திறன் மேம்பாடு, ஆங்கில மொழி பேச்சுத்திறன் வளர்த்தல், வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தல், நூலகத்தின் பயன்பாட்டினை அதிகரித்தல், கலை மற்றும் பண்பாட்டு திறன் பகிர்வு மற்றும் திறன் வளர்த்தல் போன்றவை தொடர்பாக தமிழ்நாடு அரசிற்கும், பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே முதல்வர் முன்னிலையில் தலைமைச்செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Related Stories: