சைதாப்பேட்டை ஏடிஎம் மையத்தில் பேட்டரி, சிசிடிவி கேமரா கொள்ளை: ஆட்டோவில் வந்த 3 பேருக்கு வலை

சென்னை: சைதாப்பேட்டை மார்க்கெட் சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் இருந்து 3 பேட்டரி, சிசிடிவி கேமரா மற்றும் டிவிஆர் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Advertising
Advertising

சென்னை சைதாப்பேட்டை மார்க்கெட் சாலையில் கனரா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. மார்க்கெட் பகுதி என்பதால் எப்போதும் இங்கு ஆட்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுவது வழக்கம்.

நேற்று காலை பணம் எடுக்க வந்த நபர் ஒருவர் ஏடிஎம் உள்ளே இருக்கும் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து சைதாப்ேபட்டை காவல் நிலைத்திற்கு தகவல் கொடுத்தார்.

தகவலறிந்து போலீசார் மற்றும் கனரா வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது ஏடிஎம் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருந்த 3 பேட்டரிகள் மற்றும் சிசிடிவி கேமரா, அதன் டிவிஆர் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கனரா வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஏடிஎம் எதிரில் உள்ள கட்டிடத்தில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி பதிவுகளை ெபற்று பார்த்தபோது நேற்று முன்தினம் இரவு 3 நபர்கள் ஆட்டோவில் வந்து 3 பேட்டரிகள் கொள்ளையடித்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன்படி போலீசார் ஆட்டோ பதிவு எண் மற்றும் கொள்ளையர்களின் புகைப்படங்களை வைத்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். ஏடிஎம் மையத்தில் பேட்டரி, சிசிடிவி கேமரா கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: