×

இவான்ஸ் கல்வி குழும தாளாளர் இல்ல திருமண விழா

நாகர்கோவில், பிப். 21 :  நாகர்கோவில் கலைநகர், மறைந்த வேல்நாடார்-செல்லம்மாள் ஆகியோரின் மகன்வழி பேத்தியும், கோட்டையடி சாம் தங்க ராஜேஸ் - மேரி செல்வபாய் ஆகியோரின் மகள்வழி பேத்தியும், என்.ஜி.ஓ காலனி இவான்ஸ் கல்வி குழும தாளாளர் டாக்டர் வே.பி.மணி - இவான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சா.ஜோஸ்லின் ஞான கிறிஸ்டி ஆகியோரின் மகளும், இவான்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலென்ஸ் பள்ளி மேலாளருமான பி.இவான்ஸிக்கும், மேலசந்தையடி வி.சாமுவேல் சுகிர்த சந்திரா - டாக்டர் ஆர்.ேசன்றி தேவபெல் ஆகியோரின் மகனும், எஸ்.டி.எஸ் குரூப் ஆப் பள்ளிகளின் நிர்வாக இயக்குநருமான சா.பிரவினுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு நாளை (22ம் தேதி) காலை 9.30 மணிக்கு நாகர்கோவில் இருளப்பபுரம் சி.எஸ்.ஐ ஆயர் மண்டல திருச்சபையில் வைத்து திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்தை தொடர்ந்து கோட்டார் பறக்கை ரோடு சந்திப்பில் உள்ள எம்.டி.பி கம்யூனிட்டி ஹாலில் திருமண விருந்து நடைபெற உள்ளது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை இவான்ஸ் கல்வி குழும தாளாளர் டாக்டர் வே.பி.மணி - இவான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சா.ஜோஸ்லின் ஞான கிறிஸ்டி, மணமகளின் சகோதரர் பி.வெல்பின் மற்றும் உறவினர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Wedding Ceremony ,Evans Education Group Tutor ,
× RELATED பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி...