கருணாநிதி சிலைக்கு தொண்டரணி மரியாதை

ஈரோடு, பிப். 15: ஈரோட்டில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாநகர மகளிர் தொண்டரணி சார்பில் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க.சாலையில் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் முழு உருவ சிலைக்கு மாவட்ட திமுக சார்பில் தினமும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று ஈரோடு மாநகர மகளிர் தொண்டரணி சார்பில் மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமை வகித்தார்.மாநகர செயலாளர் சுப்ரமணி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், மாநகர மகளிர் தொண்டரணி அமைப்பாளர் திலகவதி, துணை அமைப்பாளர் தமிழரசி, லீலா, ஆனந்தி, மகளிரணி கலைச்செல்வி, தனலட்சுமி, பகுதி செயலாளர் அக்னிசந்துரு, வார்டு செயலாளர் துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

× RELATED செங்கத்தில் அனுபாம்பிகை ரிஷபேஸ்வரர்...