×

ள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை போதை மாத்திரை கும்பலை ெபாறிவைத்து பிடித்த போலீஸ் நிதிநிறுவன ஊழியரை வெட்டி பணம் பறித்த வழக்கில் தொடர்பு

பகருங்கல், பிப். 15:  மார்த்தாண்டம் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மாலை மார்த்தாண்டம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். இதில், அவர் இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் என்பதும், மார்த்தாண்டம் பெத்தேல் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருப்பதாகவும் தெரியவந்ததுஏற்கனவே நேற்று முன்தினம் பெத்தேல் தெரு அருகே, தனியார் நிதி நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டி வழிப்பறி நடந்ததை அடுத்து உஷாரான போலீசார் அவரது வீட்டை சோதனையிட்டனர்.இதில், வீட்டில் 20 போதை மாத்திரை இருந்ததை கண்டுபிடித்தனர். அது குறித்து விசாரித்த போது, தான் போதை மாத்திரை வியாபாரி என்பதும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை ெசய்து வருவதும், தக்கலை பகுதியை சேர்ந்த சிலர் தனக்கு போதை மாத்திரை சப்ளை செய்வதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து பிடிபட்ட வாலிபரின் செல்போனில் இருந்து தக்கலை வாலிபர்களை தொடர்பு கொண்டு போலீசார் பேச வைத்தனர். கூடுதல் போதை மாத்திரைகள் தனக்கு தேவைப்படுவதால் அதை வாங்க தக்கலை வருவதாகவும், பஸ் நிலையம் அருகே மாத்திரைகளை கொண்டு வருமாறும் போலீசார் கூற வைத்தனர். வாலிபரும் அவ்வாறே கூறினார்.இது குறித்து உடனடியாக தக்கலை மற்றும் தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தக்கலை போலீசார் பஸ் நிலையம் அருகே ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பைக்கில் வந்த 3 பேரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் அன்று இரவு தக்கலை காவல் நிலையத்தில் இருந்த ஒருவர் தப்பியோடினார்.
மற்ற இருவரிடமும் விசாரித்ததில், குமரி மாவட்டத்தில் பெரிய அளவில் நெட்வொர்க் அமைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை, கஞ்சா, போதை ஊசி உள்ளிட்டவை சப்ளை செய்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரும் தான் பெத்தேல் தெரு பாறவிளை பகுதியில் தனியார் நிதி நிறுவன ஊழியர் ெஜரால்டு சிங் என்பவரை அரிவாளால் வெட்டி அவரிடம் இருந்து பணம் பறித்தது தெரியவந்தது.இதையடுத்து அவர்களுக்கு வேறு ஏதேனும் வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தனிப்படையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பியோடிய வாலிபரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : police officer ,
× RELATED ஜீப்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதல்;...