நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நெல்லையில் 6 பேர் உள்பட 61 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

நெல்லை, பிப். 14: நாடாளுமன்றத் ேதர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் 3 பேர் உள்பட மாநிலம் முழுவதும் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிய 61 டிஎஸ்பிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் ெவளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணி ெசய்துவரும் அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் பட்டியலை அரசு தயாரித்தது. அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் காவல்துறையில் பணியாற்றி வரும் 61 டிஎஸ்பிக்களை பணியிடம் மாற்றம் செய்து டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.  இதன்படி சென்னை எஸ்ஐடி, சிபிசிஐடியில் டிஎஸ்பியாக இருந்த எழில் அரசு கோவை நகர சட்டம்- ஒழுங்கு உதவி கமிஷனராகவும், சென்னை மாநகர பாதுகாப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த நல்லதுரை சென்னை மாநகர மேற்கு மதுவிலக்கு பிரிவு உதவி கமிஷனராகவும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த பழனி திருவண்ணாமலை மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவுக்கும், சென்னை தலைமை அலுவலக டிஎஸ்பி உதய சூரியன் பிஇடபிள்யூ டிஎஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த இளங்கோவன் நெல்லை மத்திய குற்றப்பிரிவு புலனாய்வு சிஐடி டிஎஸ்பியாகவும், விருதுநகர் மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாக இருந்த சுதாகர் நெல்லை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை உதவி கமிஷனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஎஸ்பி கிருஷ்ணசாமி நெல்லை மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஸ்பியாக இருந்த மோகனுக்கு பதிலாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தலைமையிடத்தில் காலிபட்டியலில் இருந்த டிஎஸ்பி திபு நெல்லை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு கூடுதல் உதவி கமிஷனராக பணியிடம் மாற்றப்பட்டுள்ளார். நெல்லை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு கூடுதல் உதவி கமிஷனர் நந்தகுமார் குமரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஎஸ்பியாகவும், விளாத்திகுளம் டிஎஸ்பி தர்மலிங்கம் மதுரை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை உதவி கமிஷனராகவும் என தமிழகம் முழுவதும் 61 டிஎஸ்பிக்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: