காவேரிப்பட்டணத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

காவேரிப்பட்டணம், பிப்.12:   காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பொதுமக்களிடையே பிரசாரம் செய்தனர்.

காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் வெங்கட்ராஜூலு தலைமை வகித்து, பேரணியை தொடங்கி வைத்தார். உதவித் தலைமை ஆசிரியர் சீனிவாசன், தேசிய பசுமைப்படை ஒன்றிய செயலர் பவுன்ராஜ் முன்னிலை வகித்தனர். பேரணியில் தேசிய பசுமைப்படை, தேசிய மாணவர் படை, பாரத சாரணர் சங்கத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வீதி வீதியாக சென்று பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

இப்பேரணியில், வட்டார வள மேற்பார்வை அலுவலர் அம்பிகேஸ்வரி, உதவித் தலைமை ஆசிரியர் குப்புசாமி, தேசிய மாணவர் படை அலுவலர் கோபு, அண்ணாதுரை, ராகவன், மாதவமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, எஸ்.ஐ. விஸ்வநாதன் ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் என்ற தலைப்பில், ஒன்றிய அளவிலான பேச்சுப்போட்டி, வினாடி வினா, ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்ற மாணவர்கள் கிருஷ்ணகிரியில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை மாணவர்கள் செய்திருந்தனர்.

Related Stories: