சங்கரன்கோவில் அருகே மகாவராகி அம்மன் கோயில் வருஷாபிஷேகம்

சங்கரன்கோவில், பிப். 8: சங்கரன்கோவில் அருகே உடப்பன்குளம் - களப்பாகுளம் இணைப்பு சாலையில் அமைந்துள்ள மகாவராகி அம்மன் கோயிலில் 5ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி காலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து கோயிலில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர், உன்மத்தபைரவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் 12 மணிக்கு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கும்ப கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது. பின்னர் மகா வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தன. பூஜைகளை துர்கா பிரியங்காதேவி உபாஷகர் சக்திகணேஷ் குழுவினர் நடத்தினர். தொடர்ந்து கோ பூஜையும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் மனோன்மணி அம்பாள் உபாஷகர் சக்திவேல், பரமகணேசன், ஓய்வுபெற்ற பேராசிரியர் முத்துசாமி, முருகன், ஜெயராமன், நம்பிநாராயணன், மாரியப்பன் மற்றும் களப்பாகுளம், உடப்பன்குளம், சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் திருச்செந்திலாண்டவர் பாதயாத்திரை குழுவினர் செய்து இருந்தனர்.

Related Stories: