கடையம், உவரி, ஏர்வாடியில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி

கடையம், பிப். 1: கடையம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி சார்பில் உலக தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தேசிய தொழுநோய் ஒழிப்பு பேரணி நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் பழனிகுமார் தலைமை வகித்தார். சுகாதார மேற்பார்வையாளர் மூலநாதன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை மீரா, மருத்துவமற்ற மருத்துவ மேற்பார்வையாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி பஸ் நிலையம், ரதவீதி, மெயின் ரோடு வழியாக சென்று மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தொழுநோய் அறிகுறி விளக்கம் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடியும், கோஷமிட்டவாறும் சென்றனர். ஆசிரியர்கள் ராமமூர்த்தி, அருணாசலம், விக்னேஷ், சண்முகம், வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திசையன்விளை:  உவரி புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் தொழுநோய் மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை வட்டார மருத்துவ அலுவலர் கண்ணன் துவக்கி வைத்தார். மருத்துவ அலுவலர்கள் நிவாஸ், செல்வகணேஷ் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை ஸ்பிரினா வரவேற்றார். மாணவ, மாணவிகளுக்கு தொழுநோய் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர்.

ஏற்பாடுகளை திசையன்விளை வட்டார மருத்துவமில்லா மேற்பார்வையாளர் கணேசன், சுகாதார ஆய்வாளர்கள் பெலிக்சன், ரவிச்சந்திரன் செய்திருந்தனர்.  இதேபோல் ஏர்வாடியில் நடந்த தொழுநோய் விழிப்புணர்வு பேரணியில் இந்திரா ஐடிஐ மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியை ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பிரியதர்சினி துவக்கி வைத்தார். இதில் டாக்டர் பீர்முகைதீன், செஞ்சிலுவை சங்க தலைவர் சபேசன், சுகாதார ஆய்வாளர் சிதம்பரம், தினேஷ் பிரான்சிஸ், அய்யப்பன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் சிவசுப்பிரமணியன் செய்திருந்தார்.

Related Stories: