அச்சன்புதூரில் பாமக கொடியேற்று விழா

செங்கோட்டை, பிப். 1:  நெல்லை வடக்கு மாவட்ட பாமக சார்பில் அச்சன்புதூர், நெடுவயல் ஆகிய பகுதிகளில் கொடியேற்று விழா நடந்தது. துணை தலைவர் அய்யம்பெருமாள் வரவேற்றார். இளைஞரணி துணை செயலாளர் ராவுத்தர் சாகுல் ஹமீது, மாவட்ட செயலாளர் சீதாராமன் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் திலகபாமா தலைமை வகித்து கொடியேற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஆவுடையப்பன், அமைப்பு செயலாளர் சுப்பையா, இளைஞரணி செயலாளர் நேசமணி, தலைவர் இசக்கிராஜ், விவசாயிகள் அணி செயலாளர் ராஜேந்திரன், தொழிற்சங்க தலைவர் ரோகி தாமஸ், செங்கோட்டை நகர செயலாளர் அபு அண்ணாவி, தலைவர் ராமையா, ஒன்றிய செயலாளர் அய்யப்பன், நகர இளைஞரணி செயலாளர் கல்வத்கனி கலந்து கொண்டனர்.

Related Stories: