ஜாக்டோ ஜியோ போராட்டம் தாலுகா அலுவலகம் ‘வெறிச்’

அருப்புக்கோட்டை, ஜன. 31: ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் அருப்புக்கோட்டையில் தாலுகா அலுவலகம் நேற்று வெறிச்சோடியது.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, கடந்த 9 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறது. தினமும் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பணிக்கு திரும்பினர். ஆனால், அரசு அலுவலர்கள் பணிக்கு திரும்பவில்லை. அருப்புக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் அலுவலர்கள் நேற்று பணிக்கு வராததால் அலுவலகம் வெறிச்சோடியது.

இதேபோல் ஆர்டிஓ அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகம், ஆகியவற்றில் ஒரு சில அலுவலர்களை தவிர மற்ற அலுவலர்கள் பணிக்கு வரவில்லை. மேலும், தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியர்கள், விஏஓக்களில் 45 பேர்களில் 41 பேர் பணிக்கு வரவில்லை. இதனால், பணிகள் பாதிக்கப்பட்டன.

Related Stories: