வணிகர் சங்கங்களின் பேரவை ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜன.31: வணிக நிறுவனங்களை சீல் வைப்பதை கண்டித்தும், அபாய இரும்பு பாலம் அமைக்க கூடாது என்று கேட்டும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பேரவை தலைவர் டேவிட்சன் தலைமை வகித்தார். பேரவை செயலாளர் நாராயணராஜா, மாவட்ட பேரவை இணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், பேரவை கவுரவ தலைவர் யூசுப், ராஜதுரை, அருள்ராஜ், மாவட்ட தொழில் வணிகர் நல பேரவை பொருளாளர் ஜெபராஜ், செயலாளர் ஜேம்ஸ் மார்ஷல், காரவிளை செல்வன், மனோகரன், கத்பட், சிவதாணு, ராஜமணி, சிதம்பரம், தியாகராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: