முருக்கோடை கிராமத்தில் மக்கள்தொடர்பு முகாம்

வருசநாடு, ஜன.25: வருசநாடு அருகே முருக்கோடை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.தேனி மாவட்ட கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவ் தலைமைவகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில்  ரூ. 11. 57 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் தினேஷ், மாவட்ட திட்ட அலுவலர் திலகவதி, பெரியகுளம் கோட்டாட்சியர் ஜெயப்பிரிட்டா, ஆண்டிபட்டி தாசில்தார் அர்ஜூனன், முன்னாள் மயிலாடும்பாறை ஒன்றியக்குழு தலைவர் முருக்கோடை ராமர், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் கொத்தாளமுத்து, மயிலாடும்பாறை வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம அலுவலர் அன்பழகன், ஊராட்சி செயலர் பாண்டியன்  உள்ளபட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: