ஜாக்டோ ஜியோ போராட்டம் - கம்பத்தில் வெறிச்சோடிய பள்ளிகள்

கம்பம், ஜன.24: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நேற்று கம்பத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஏராளமான பள்ளிகள் பூட்டப்பட்டும், வெறிச்சோடியும் கிடந்தன.  ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இரண்டாம் நாளாக நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். அலுவலர்கள் யாரும் வராததால் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இரண்டாவது நாளாக பூட்டப்பட்டு கிடந்தது. ஆசிரியர்கள் வராததால் கம்பம் மஞ்சக்குளம் பகுதியிலுள்ள கம்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, கம்பம் ஸ்ரீ முக்தி விநாயகர் நடுநிலைப்பள்ளி, கம்பம் உழவர்சந்தை அருகே உள்ள அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி உட்பட நகராட்சிப்பகுதியில் ஏனைய பள்ளிகள் பூட்டப்பட்டிருந்தன. கம்பம் எம்பிஎம் உயர்நிலைப்பள்ளி, கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் வராததால் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் திரும்பிச் சென்றனர்.

கம்பம் சிபியூ மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் போரட்டத்தில் கலந்துகொள்ள சென்றதால், பள்ளிக்கு வந்திருந்த பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு தலைமை ஆசிரியர் அபுதாஹிர் பாடம் நடத்தினார்.

Related Stories: