பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது ஞாயிறு தோறும் படியுங்கள் மூதாட்டியை தாக்கியவர் கைது

விருதுநகர், ஜன. 23: விருதுநகர் கம்மாபட்டியைச் சேர்ந்தவர் காளியம்மாள் (65). இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த பாண்டிக்கும் (55), ஆட்டு உரலை வைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் புதிய வீட்டிற்கு பால் காய்ச்சும்போது, நடைபாதையில் இருந்த ஆட்டுஉரலை அப்புறப்படுத்தினார். இதானல், ஆத்திரமடைந்த பாண்டி நடப்பதற்கு இடையூறாக மீண்டும் ஆட்டு உரலை வைத்துள்ளார். இது தொடர்பாக காளியம்மாள், பாண்டியை தட்டிகேட்டுள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த பாண்டி, மூதாட்டி காளியம்மாள், அவரது மகள் ஜெயலட்சுமி, பேரன் சக்திவேல் ஆகியோரை கம்பால் தாக்கி காயப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு போலீசில், காளியம்மாள் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியை கைது செய்துள்ளனர்.விவசாயி பலிசாயல்குடி, ஜன. 23: சாயல்குடி அருகே குளத்தில் மூழ்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.சாயல்குடி அருகே கொக்கரசன் கோட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி உடையார்(45). இவர் விவசாய வேலைகளை முடித்து விட்டு கிராமத்திலுள்ள ஊரணியில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெருநாழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Related Stories: