×

ஊத்தங்கரையில் 5வது நாளாக பெருமாள் சிலை நிறுத்தம்

ஊத்தங்கரை, ஜன.22: ‘ஊத்தங்கரை பாம்பாறு தரைப்பாலத்தை கடக்க முடியாததால், நேற்று 5வது நாளாக பிரமாண்ட பெருமாள் சிலை அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வரும் ராட்சத இயந்திரத்தை எதிர்பார்த்து சிலை ஏற்பாட்டாளர்கள் காத்திருக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொரக்கோட்டையில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 300 டன் எடையுள்ள பிரமாண்ட பெருமாள் சிலையை ராட்சத டிரெய்லர் லாரியில் ஏற்றிக்கொண்டு கடந்த மாதம் 7ம் தேதி பெங்களூரு நோக்கி புறப்பட்டனர். வந்தவாசி, திருவண்ணாமலை சாலையில் பல்வேறு தடைகளை தாண்டி கடந்த 16ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையை சிலை வந்தடைந்தது.

அங்கிருந்து, மறுநாள் 17ம் தேதி ஊத்தங்கரை நோக்கி புறப்பட்டது.வழியில் பாம்பாறு தரைப்பாலத்தை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து லாரியுடன் சேர்ந்து சிலையை இழுப்பதற்கான ராட்சத இயந்திரம் வரவழைக்கப்படுகிறது. அந்த இயந்திரம் வந்தால் மட்டுமே சுவாமி சிலையை அங்கிருந்து நகர்த்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று 5வது நாளாக அதே பகுதியில் சிலை நிறுத்தப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags : Perumal ,
× RELATED திருவாரூர் அருகே பக்தவத்சல பெருமாள்...