மாதவரத்தில் வங்கி அலாரம் ஒலித்ததால் பரபரப்பு

திருவொற்றியூர்: மாதவரம் தபால் பெட்டி சாலையில் சிண்டிகேட் வங்கி உள்ளது. இங்கு காவலாளி மட்டும் பணியில் இருந்ததாக தெரிகிறது.நேற்று அதிகாலை வங்கியின் அலாரம் ஒலித்துக்கொண்டே இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வங்கி முன் திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. தகவல் கிடைத்ததும் மாதவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும், வங்கி மேலாளர் ஜெரால்டு சம்பவ இடத்துக்கு வந்தார். பின்னர் மேலாளர் தலைமையில் போலீசார் வங்கியை திறந்து உள்ளே சென்று  பார்த்தனர்.அப்போது, கம்ப்யூட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அலாரம் ஒலித்தது தெரியவந்தது.

Advertising
Advertising

Related Stories: