தலைவாசலில் திமுக ஊராட்சி சபை கூட்டம்

ஆத்தூர், ஜன.11: சேலம் மாவட்டம் தலைவாசல் கிராமத்தில், திமுக சார்பில் தமிழகத்தின் அவலநிலைக்கு முற்றுபுள்ளி வைக்கும் நேரம் என்ற தலைப்பில் ஊராட்சி சபை கூட்டம் சிவன் கோயில் திடலில் ஒன்றிய பொறுப்பாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளரும், கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான வி.பி. துரைசாமி கலந்து கொண்டு கிராம மக்களிடம் கலந்துரையாடினார்.  அவர் பேசியதாவது; தமிழகத்திலும், மத்தியிலும் மக்களை ஏமாற்றும் அரசாங்கங்கள் நடந்து வருகின்றன. வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இன்றைக்கு ரேஷன் கார்டுக்கு ஆயிரம் லஞ்சமாக வழங்கப்படுகிறது. திமுக ஆட்சியில் மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு தாராளமாக கடன்கள் வழங்கப்பட்டன. இதனால் பெண்கள் முன்னேற்றம் அடைந்தனர்.

ஆனால் தற்போது மகளிர் சுயஉதவிக்குழுகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. வரும் சித்தரை மாதம் தேர்தல் வரும்போது நீங்கள் உதயசூரியனுக்க மறக்காமல் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும். தமிழகத்தின் அடிப்படை உரிமைகளை கூட பெற முடியாத அரசாக இந்த அரசாங்கம் உள்ளது. எனவே தமிழகத்தை மீட்டு எடுக்க அனைவரும் உதயசூரியனுக்கு வாக்களிக்க தயாராகுங்கள். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னதுரை, குணசேகரன், ஒன்றிய பொறுப்பாளர்கள் லட்சுமணன், அரங்கசாமி, வரகூர் ஜெயபால், தலைவாசல் ஊராட்சி செயலாளர் தேவேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சீனிவாசன், கிருஷ்ணன், இளைஞரணி செயலாளர் நிவாஸ், ராஜலிங்கம், கண்ணுசாமி, செந்தில் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

× RELATED ஆத்தூரில் திமுக சார்பில்...