கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக 16 கோடியில் அதிநவீன வசதிகளுடன் திருமண மண்டபம்: ஒருநாள் வாடகை 10 லட்சம் நிர்ணயம்

சென்னை: ராஜா அண்ணாமலைபுரம் பசுமை வழிச்சாலையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக ரூ.16.75 ேகாடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய திருமண மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டது.  மண்டபத்தின் பரப்பளவு 68,272 சதுர அடி. கட்டுமான பணி அனைத்தும் கடந்த நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்தது.முதல் தளத்தில் 11 ஆயிரம் சதுர அடியில் 1000 பேர் அமர்ந்து திருமண நிகழ்ச்சியைக் காணும் வகையில் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. 1927 சதுர அடியில் முக்கிய பிரமுகர்கள் உணவு அருந்த 80 இருக்கைகள் கொண்டதாகவும்,  10,722 சதுர அடி பரப்பளவில் தரைத்தளத்தில் 475 இருக்கைகள் கொண்ட உணவு அருந்தும் கூடமும் உள்ளது.

Advertising
Advertising

நான்கு சக்கர வாகனங்கள் 63 நிறுத்திடவும், இரு சக்கர வாகனங்கள் 63 நிறுத்திடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.   மணமகன், மணமகள் அறைகளை தவிர 12 தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் மற்றும் கழிவுநீர் செல்ல வசதிகள், 24 மணி நேரமும் ஜெனரேட்டர், கண்காணிப்பு கேமரா வசதி, தீயணைப்பு கருவிகள் ஆகியவற்றுடன்  பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.   இந்த அதிநவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த திருமண மண்டபத்தின் ஒருநாள் வாடகை ரூ.10 லட்சமாக வசூலிக்கப்படுகிறது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: