திருப்புத்தூரில் வேலை வாய்ப்பு முகாம்

திருப்புத்தூர், ஜன. 3: திருப்புத்தூர் அண்ணா சிலை அருகே உள்ள நேஷனல் அகாடமி சமுதாயக் கல்லூரியில் நாளை (ஜன.4) காலை 10 மணி அளவில் கேட்டரிங் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கேட்டரிங் படித்த மாணவர்கள் பங்கேற்கலாம். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நிறைவான சம்பளம், தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்படும். இதில் பங்கு பெறும் மாணவர்கள் அசல் சான்றுதலுடன் நேரில் வந்து பங்கேற்று பயன்படுத்திக் கொள்ளும்மாறு நேஷனல் அகாடமி சமுதாயக் கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர் கேட்டுகொண்டுள்ளார்.

Related Stories: