கிருஷ்ணகிரியில் ஆஷா திட்டப்பணியாளர் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி, டிச.28:  கிருஷ்ணகிரியில், இந்தியாவின் தரமான பொது சுகாதார மற்றும் சமூக சேவைகளுக்கான ஆஷா திட்ட பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். செயலாளர் மோகன் வரவேற்றார்.  தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் பங்கேற்று பேசினார். பன்னாட்டு பொது சங்க கூட்டமைப்பின் தெற்காசிய செயலாளர் கண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஆஷா மாவட்டத் தலைவர் செல்வமணி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார், மாநில செயலாளர் சரவணன், இளைஞர் அணி செயலாளர் பாலாஜி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

கூட்டத்தில், மலைவாழ் கிராமம் தோறும் பாமர மக்களை பராமரிக்கும் நோக்கில் ஆஷா திட்டப் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். இவர்கள் மிகக் குறைவான ஊதியம் பெற்று வருவதால், இவர்களின் பணி குறித்த தகவல்களை பெற்று, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சூளகிரி, கெலமங்கலம் மற்றும் தளியை சேர்ந்த மலைவாழ் மக்களுக்காக பணியாற்றி வரும் ஆஷா திட்ட பணியாளர்கள் 175 பேர் பங்கேற்றனர்.  

Related Stories: