பாபநாசத்தில் ஜேஆர்சி பயிற்சி முகாம்

வி.கே.புரம், நவ. 30:  சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அளவிலான அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியை சேர்ந்த ஜூனியர் ரெட்கிராஸ் மாணவர்களுக்கு, பாபநாசத்தில் 2 நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். ஆலோசகர் கணேசமூர்த்தி வரவேற்றார். பயிற்சி முகாம் முதல் நாளன்று, மாணவர்களுக்கு பாபநாசத்தில் இருந்து அகஸ்தியர் அருவி வரை   மலையேறும் பயிற்சி நடந்தது. தொடர்ந்து அருவி கரையில் சுற்றுலா பயணிகள் விட்டுச் சென்ற பிளாஸ்டிக் கழிவுகளை மாணவர்கள் அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர். இரண்டாம்  நாள் பயிற்சியில் மாநில பயிற்சியாளர் ஆடுதுரை, மாணவர்களுக்கு தனித்திறன் பயிற்சி, கூட்டுப்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை அளித்தார். ஆசிரியர் பொன்மகேஷ் நன்றி கூறினார்.

Related Stories: