சேலம் குகையில் புதிய விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் துவக்கம்

சேலம், நவ.28: சேலம் குகையில் புதிய விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் துவக்கப்பட்டது. சேலம் குகை சிவனார் தெருவில் குமரகிரி தொடக்க விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் புதியதாக துவங்கப்பட்டுள்ளது. இதனை சக்திவேல் எம்எல்ஏ, சேலம் மண்டல கைத்தறிப்பிரவு இணை இயக்குனர் கிரிதரன், கோ-ஆப்டெக்ஸ் திட்டம் மற்றும் வடிவமைப்பு பிரிவு மேலாளர் குணசேகரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் சேலம் மாநகர் மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் சரவணமணி, சங்கத்தலைவர் பத்மநாபன், துணைத்தலைவர் சரவணன், இயக்குனர்கள் மனோகரன், கவுரிசங்கர், நாகராஜ், ஏ.பி.சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: